தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒரு லட்சத்திற்கும் மேல் வருவாய் கொண்ட கோயில்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்களுக்கு, கடந்த ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படியை 34 விழுக்காட்டில் இருந்து 38 விழுக்காடாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் பணியாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் கூடுதலாக செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் கருணைக்கொடையை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு கூடுதலாக ஒன்றரை கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.