ஆந்திர முதல்வரின் தங்கையை கிரேன் மூலம் காரோடு கொத்தாக இழுத்து சென்ற போலீஸ் - தீயாய் பரவும் வீடியோ
தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் வீட்டை முற்றுகையிட முயன்ற, ஒய்எஸ்ஆர் ஷர்மிளாவின் காரை, போலீசார் கிரேன் மூலம் இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஷர்மிளா, முதல்வர் சந்திரசேகரராவுக்கு எதிராக பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரையின் போது சந்திரசேகரராவின் வீட்டை அவர் முற்றுகையிட முயன்றார். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி ஷர்மிளாவின் காரை கிரேனில் இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.