உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினத்தை ஒட்டி, இலங்கையின் கொழும்பு நகரில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என சிங்கள அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'புலிகளுக்கான நினைவேந்தல் எமக்கு வேண்டாம்' என்ற வசனம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய படி, சிங்கள அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பரபரப்பு ஏற்பட்டதால், போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.