"சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்"... "சுற்றுலாவை மேம்படுத்துதல்" - பிரதமர் மோடி சிறப்புரை

Update: 2023-03-04 03:25 GMT
  • சுற்றுலாவை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இணைய கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
  • அப்போது சுற்றுலாவை ஊக்கப்படுத்த வழக்கத்தை தாண்டி சிந்திப்பதோடு நீண்ட கால திட்டங்களை வகுக்க வேண்டும் என தெரிவித்த பிரதமர் மோடி, சுற்றுலா தலங்களின் ஆற்றல் வளம் மற்றும் எளிதான பயணம் ஆகியவை திட்டமிடலில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.
  • அத்துடன் வசதிகளை அதிகரித்தால் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
  • பயணங்கள் எளிதாகும் போது சுற்றுலா பயணிகள் ஈர்க்கப்படுவதாக தெரிவித்த அவர், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் போது வேலை வாய்ப்புகளும் அதிகரிப்பதாக தெரிவித்தார்.
  • இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அசாதாரணமான அளவில் அதிகரித்திருப்பதாக தெரிவித்த அவர், தொழில் முறை சுற்றுலா வழிகாட்டுதலை வளர்த்தெடுக்க உள்ளூர் கல்லூரிகளில் சுற்றுலா குறித்த சான்றிதழ் படிப்பு மற்றும் போட்டிகள் நடத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
  • அத்துடன் இந்தியாவில் 50 சுற்றுலா தலங்களை மேம்படுத்தி உலகம் முழுவதும் அவற்றின் புகழைப் பரப்ப வேண்டும் தெரிவித்த பிரதமர் சுற்றுலாவுக்கான உள்ளடக்கத்தை உருவாக்கும் போது அனைத்து மொழிகளும் சேர்க்கப்பட வேண்டும என வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்