இன்ஸ்டாகிராமில் வந்த புகைப்படம்... | அதிர்ச்சி அடைந்த இளம்பெண் | தனியார் நிறுவன ஊழியர் அட்டூழியம்

Update: 2022-08-28 10:59 GMT

இன்ஸ்டாகிராமில் பெண்ணின் ஆபாச படத்தை நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த ஸ்டானின் பெனட் என்பவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார். அந்த பெண் மறுத்ததால், அவரது சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்டாலின் பெனட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்