ஆன்லைன் App-களில் அசத்தல் அம்சம்.. ஒரே கிளிக்கில் 10 சதவீதம் பணம் மிச்சம்.. இனி எல்லாமே ஈஸி தான்..!

Update: 2023-02-22 04:57 GMT
  • இந்திய தேசிய பேமென்ட்ஸ் நிறுவனம் 2016ல் உருவாக்கிய யு.பி.ஐ மென்பொருளை அடிப்படையாக கொண்டு, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல்வேறு பணப் பரிவர்த்தனை செயலிகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
  • இதே போல பே நவ் என்ற பணப்பரிவர்த்தனை செயலி சிங்கப்பூரில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை 2017ல் சிங்கப்பூர் வங்கிகளின் குழுமம் உருவாக்கியது.
  • யு.பி.ஐ மற்றும் பே நவ் செயலிகளை இணைக்கும் திட்டத்தை செவ்வாய் அன்று பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங், காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.
  • இதன் மூலம் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இதர நாட்டினர், இந்தியாவிற்கு செயலி மூலம் மிக எளிதாக பணம் அனுப்ப வகை செய்யப்பட்டுள்ளது.
  • அதே போல சிங்கப்பூரில் வசிப்பவர்களின் அலைபேசி எண்களின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து செயலி மூலம் உடனுக்குடன் பணம் அனுப்ப முடியும்.
  • சிங்கப்பூரில் இருந்து செயலி மூலம் சிங்கப்பூர் டாலரில் இந்தியாவிற்கு பணம் அனுப்பினால், அதை பெறும் இந்திய வங்கிகள், அன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில், இந்திய ரூபாயாக அதை மாற்றி, பெறுனரின் வங்கி கணக்கில் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது.
  • இதே போல இந்திய ரூபாயில், யு.பி.ஐ செயலி மூலம் சிங்கப்பூரில் இருப்பவருக்கு அனுப்பப்படும் தொகையை, சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் வங்கி, சிங்கப்பூர் டாலராக
  • மாற்றி, பெறுநரின் கணக்கில் வரவு வைக்கும்.
  • தற்போது சுமார் 6.5 லட்சம் இந்தியர்கள் சிங்கப்பூரில் வசிக்கும் நிலையில், அவர்களுக்கு இந்த சேவை பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
  • தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு சுமார் 42,060 கோடி ரூபாய் அனுப்பப்படுகிறது.
  • செயலிகள் மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனை, இதற்கான செலவுகளை 10 சதவீதம் வரை குறைக்கும் என்று துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்