Sweet Mangoes உரித்தெடுத்த MI..Paltans ஐ பதம் பார்க்குமா GT..Cskவுடன் மோதப்போவது யார்
ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டிக்கு மும்பை அணி முன்னேறி உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியும் மும்பை அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணியில், கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்னுக்கும், இஷான் கிஷான் 15 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த கேமரூன் கிரீன் - சூர்ய குமார் யாதவ் ஜோடி, அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. இதனால் மும்பை அணியின் ஸ்கோர் உயர்ந்த நிலையில்,...
கிரீன் 41 ரன்களுக்கும், சூர்ய குமார் யாதவ் 33 ரன்களுக்கும் நவீன் உல் ஹக் ஓவரில் ஆட்டம் இழந்தனர்.
திலக் வர்மா மற்றும் நேஹல் வதேராவின் கேமியோ இன்னிங்ஸால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு மும்பை 182 ரன்கள் குவித்தது.
பின்னர் 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஸ்டோய்னிஸ் மட்டும் ஒரு முனையில் 40 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை இழந்தனர். ஸ்டோய்னிஸ் உள்பட 3 பேட்டர்கள் ரன் அவுட் ஆகினர்.
இதனால், 17வது ஓவரில் 101 ரன்களுக்கு லக்னோ ஆல்-அவுட் ஆகி தொடரில் இருந்து வெளியேறியது. 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை 2வது குவாலிஃபயர் போட்டிக்கு முன்னேறியது.
மும்பை தரப்பில் அபாரமாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மாத்வல், 3.3 ஓவர்களில் வெறும் 5 ரன்கள் மட்டுமே வழங்கி, 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
நாளை அகமதாபாத்தில் நடைபெறும் 2வது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் உடன் மும்பை மல்லுக்கட்ட உள்ளது.