கென்யாவில் சுட்டு கொல்லப்பட்ட பாகிஸ்தான் நிருபர்

Update: 2022-10-26 12:23 GMT

கென்யாவில் சுட்டு கொல்லப்பட்ட பாகிஸ்தான் நிருபர்

கென்யாவில் சாலை விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்ட பாகிஸ்தான் நிருபர் கென்ய காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் ஆதரவாளரும் பிரபல செய்தித் தொலைக்காட்சியில் பணியாற்றியவருமான அர்ஷத் ஷெரிஃப் துபாயில் இருந்து கென்யாவிற்கு சென்ற போது உயிரிழந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டு காரைப் பிடிப்பதற்காக போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி அர்ஷத்தின் கார் சென்றதால் கென்ய போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அர்ஷத் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்