திருநங்கை செய்தி வாசிப்பாளரைக் குறி வைத்து துப்பாக்கிச் சூடு... அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்
- பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளரைக் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
- 26 வயதே ஆன மர்வியா மாலிக் 2018ல் பாகிஸ்தானின் முதல் செய்தி வாசிப்பாளராகி வரலாற்று சாதனை படைத்தார்.
- லாஹூரில் மர்வியாவைக் கொலை செய்ய மர்ம நபர்கள் முயன்றுள்ளனர்.
- திருநங்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் செய்தி வாசிப்பாளரான இவருக்கு பல முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன... இதற்கு பயந்தே சில காலம் லாஹூரை விட்டு அவர் தள்ளியே இருந்த நிலையில், சமீபமாகத் தான் அறுவை சிகிச்சை ஒன்றிற்காக அவர் சொந்த ஊர் திரும்பி உள்ளார்.
- அங்கு அவரைக் குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், மர்வியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.