மத்திய பிரதேசத்தில் தொடரும் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், கம்ப்யூட்டர் பாபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய பிரதேசத்தில் 87 வது நாளாக பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல்காந்தி ஈடுபட்டு வருகிறார்.
காலை நடைப்பயணம் தொடங்கியதும், ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், நாம்தேவ் தாஸ் தியாகி உள்ளிட்டோர் பங்கேற்றார்.
மேலும் சர்ச்சை சாமியாரான கம்ப்யூட்டர் பாபாவும் ராகுல் காந்தியுடன் இணைந்து பல கிலோ மீட்டர் நடந்தார்.