உக்ரைன் மீதான போரை விமர்சித்திருந்த எண்ணெய் நிறுவன தலைவர்- மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து பலி

Update: 2022-09-02 15:42 GMT

உக்ரைன் மீதான போரை விமர்சித்த ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தின் நிர்வாகி மருத்துவமனை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் எண்ணெய் நிறுவனமான லுகோயிலின் தலைவராக இருந்த ரவில் மகனோவ் உக்ரைன் படையெடுப்பை விமர்சித்திருந்தார்.

உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜன்னல் வழியாக கீழே விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது கொலையா, தற்கொலையா என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை...

பழுது காரணமாக சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாத நிலையில், இறப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்