அள்ளஅள்ள குறையாமல் வந்த 300 கிலோ கெட்டுப்போன மீன்கள்... பார்த்து அதிர்ந்து போன அதிகாரிகள்

Update: 2022-12-14 10:16 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கெட்டுபோன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மீன்சந்தையில் உடல்களை பதப்படுத்த பயன்படுத்தப்படும் பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்படி நள்ளிரவில் சந்தையில் சோதனை நடத்திய அதிகாரிகள், 300 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். மீன்களை விற்பனை செய்ய உரிமம் பெறுவது கட்டாயம் என்றும் அறிவுறுத்திச் சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்