பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டம் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Update: 2023-06-29 15:36 GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் ஜூலை 3ஆம் தேதி நடைபெறுகிறது. பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கன்வென்ஷன் சென்டரில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. நடப்பாண்டில் நடைபெறவிருக்கும் முக்கிய சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவை தேர்தலுக்கு கட்சி தயாராகி வரும் நிலையில் இந்த அமைச்சரவை குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சரவை குழுவில் பல மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்