பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பகுதி நேர ஆசிரியர்கள் நாளைமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், 10 ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழுவினர், அரசு தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.