"கார் வேண்டாம் ஆளுக்கு ஒரு பைக்கில் ஏறுங்கள்" - பைக்கில் சென்று அமைச்சர் ஆய்வு
கடலூர் கேப்பர் மலையை சுற்றியுள்ள கிராமங்களில் வீசிய சூறாவளிக்காற்றால், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் கடும் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருன் தம்புராஜ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கீரப்பாளையம் என்ற பகுதியில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது. அந்த பகுதிக்கு வந்த மற்ற கிராமத்தை சேர்ந்தவர்கள். தங்கள் கிராமங்களிலும் பாதிப்புகளை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர். கார் வேண்டாம் பைக்கிலேயே போகலாம் என்று கூறி, விவசாயிகளின் பைக்குகளில் பயணம் செய்து ஆய்வு செய்தார்.