நீங்க ஒரு Artist -னு நிரூபிச்சிட்டீங்க..! பாறை ஓவியங்களில் வருவாய் ஈட்டும் பழங்குடியின பெண்கள்

Update: 2023-02-06 05:27 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இதில், புதுக்காடு குரும்பா கிராமத்தில் வசித்து வரும் பெண்கள் டெய்லரிங் பயிற்சியில் ஈடுபட்டு, துணி வகைகளில் ஓவியங்கள் வரைந்து வருகின்றனர்.

சேலை, ஷால்வை, துணி பைகள் உள்ளிட்டவற்றில் பாறை ஓவியங்கள், தேன் எடுப்பது, விவசாயம் செய்வது போன்ற பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பற்றின ஓவியங்களை வரைகின்றனர்.

இந்த தொழிலை மேம்படுத்த, போதுமான இட வசதி மற்றும் நிதியுதவி அளித்து, வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்