பொள்ளாச்சியில் அடுத்த பயங்கரம் - பள்ளி மாணவிகளுக்கு கடை உரிமையாளர் நிகழ்த்திய கொடூரம்
ஆனைமலையை சேர்ந்த 62 வயதான நடராஜன், அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பள்ளி மாணவிகள் பொருட்கள் வாங்க வரும் போது, அவர்களை
தொட்டு பேசுவது, ஆபாசமாக பேசுவது என பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
சிறுமிகள் இதனை வீட்டில் தெரிவித்தால் அவமானம் என்று கருதி வீட்டில் சொல்லாமலே மறைத்துள்ளனர்.
இது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியையிடம் மாணவிகள் கூறியுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பள்ளி புகார் அளித்தார்.
அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகளிர் போலீசார் மளிகைக்கடைக்காரர் நடராஜன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு நடராஜனை செய்தனர்.