உக்ரைனில் செயல்பட்டு வந்த டிரோன்(drone) தயாரிப்பு மையத்தை தகர்த்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தியது.
ஒரேநாளில் 31 ஏவுகணை தாக்குதல்களும், 12 விமான தாக்குதல்களும் உக்ரைன் மீது நடத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த போரில் உக்ரைன் நடத்தும் டிரோன் தாக்குதல், ரஷ்யாவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள டிரோன் தயாரிப்பு மையத்தை அழித்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது..