புதிய உச்சம்... சரிந்தது அன்னிய செலாவணி..! ரிசர்வ் வங்கி கையிருப்பு நிலை என்ன..?

Update: 2023-07-02 11:43 GMT

இந்திய பங்கு சந்தைகளில் அன்னிய முதலீடுகள் வெகுவாக அதிகரித்துள்ளதால், சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டிய மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ், வெள்ளியன்று 803 புள்ளிகள் உயர்ந்து, 64,718ஆக இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி குறியீடு, வெள்ளியன்று 216 புள்ளிகள் அதிகரித்து, 19,189ஆக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் சென்செக்ஸ் 1,739 புள்ளிகளும், நிஃப்டி523 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.

இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதை தரவுகள் சுட்டிக்காட்டுவதாலும், அன்னிய முதலீடுகள் இந்திய பங்கு சந்தைகளில் அதிகரித்துள்ளதுமே இதற்கு காரணம்.

கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரை இந்திய பங்கு சந்தைகளில் செய்யப்பட்டுள்ள அன்னிய முதலீடுகளின் அளவு 82,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

ஜூனில் மட்டும் 47,148 கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதே சமயத்தில் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி விகிதம் 2022 மே மாதத்தில் 19.3 சதவீதமாக இருந்து 2023 மே மாதத்தில் 4.3 சதவீதமாக குறைந்துள்ளது.

நிலக்கரி உற்பத்தி 7.2 சதவீதமும், உரங்கள் உற்பத்தி 9.7 சதவீதமும், எக்கு உற்பத்தி 9.2 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 15.5 சதவீதமும் அதிகரித்துள்ளன.

ரிசர்வ் வங்கி வசம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு 290 கோடி டாலர் குறைந்து, 59,319 கோடி டாலராக சரிந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்