விருத்தாசலத்தில் உள்ள மாணவி ஸ்ரீமதியின் சொந்த ஊரில் திடீர் எச்சரிக்கை

Update: 2022-07-18 02:50 GMT

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் சொந்த ஊரான விருத்தாசலம் பெரிய நெசலூர் கிராமத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது என வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, பெரிய நெசலூர் கிராமத்திற்கு சென்ற வட்டாட்சியர் மோகன், ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதில், பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும், வெளி நபர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்றும் அறிவுறுத்திய அவர், மீறி யாராவது வந்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலை ஏற்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்