75 வது சுதந்திர பெருவிழாவை முன்னிட்டு வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி ஏற்ற பிரதமர் மோடி நாட்டு அழைப்பு விடுத்துள்ளார். வீடுகளில் தேசியக் கொடி ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கொடியை வீட்டின் மேற்புறத்தில் பறக்க விட வேண்டும். தேசியக்கொடி தரையை பார்த்த வண்ணம் சாய்வாக பறக்க விடக்கூடாது.
நன்றாக இருக்கும் தேசிய கொடியை பயன்படுத்த வேண்டும். சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த தேசிய கொடிகளை பயன்படுத்தக் கூடாது மற்ற கொடிகளுடன் சேர்ந்து பறக்கும்போது தேசியக்கொடி தாழ்வாக பறக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேசிய கொடியை மேசை விரிப்பாக பயன்படுத்தக் கூடாது ஜன்னல்களில் திரை சீலையாகவோ அல்லது தலையணை முறையாகவோ பயன்படுத்தக் கூடாது.தேசிய கொடியின் மீது மலர்கள் உட்பட எந்த பொருட்களையும் வைக்க கூடாது. தேசியக் கொடியின் மீது மலர்களைக் கொண்டு அலங்கரிக்கவோ தூவவோ கூடாது. இருப்பினும் தேசிய கொடியை ஏற்றும்போது அதன் உள்ளே மலர்களை வைத்து கட்டலாம். தேசியக்கொடி ஏற்றும் போது அது தலைகீழாக கட்டப்படக்கூடாது. )
வாகனங்களின் பக்கவாட்டிலோ அல்லது முன்புறத்திலோ தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது. தேசிய கொடியை குப்பைத் தொட்டில் எறியவோ அல்லது பிற பொருட்களை கட்டுவதற்கான கயிறாகவோ பயன்படுத்தக்கூடாது.
தேசிய கொடியை முக கவசமாக பயன்படுத்தக் கூடாது.( தேசிய கொடியை சட்டையின் இடது புறத்தில் மட்டுமே குத்திக் கொள்ள வேண்டும் வலது புறத்தில் குத்திக் கொள்ளக் கூடாது. தேசியக்கொடியை பயன்படுத்திய பிறகு கசக்கியோ சுருட்டியோ வைக்க கூடாது. அவற்றை முறையாக மடித்து பத்திரமான இடத்தில் பாதுகாக்க வேண்டும் என வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.