வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் நகம்.. கொதித்த பயணி - கான்ட்ராக்டருக்கு ஆப்படித்த ரயில்வே
மும்பையில் இருந்து கடந்த 1-ம் தேதி கோவா சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில், மச்சீந்திரா பவார் என்ற பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் நகம் இருந்ததாக புகார் அளிக்கப்பட்டது. ரயிலில் வழங்கப்பட்ட உணவு சுவையின்றி இருந்ததாகவும் பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இப்புகாரின் அடிப்படையில், உணவு ஒப்பந்ததாரருக்கு ஐ.ஆர்.சி.டி.சி., 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. எதிர்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதை தடுக்க, சில வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.