லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறி... நகைகள், Gpay மூலம் ரூ.73,000 அபேஷ் - சிக்கிய சகோதரர்கள்

Update: 2023-03-25 06:10 GMT
  • நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் கோஷி, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
  • இவர், பூதப்பாண்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, வடசேரி பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஆசிப் என்பவர், லிப்ட் கேட்டுள்ளார்.
  • உடனே சந்தோஷ் கோஷியும் காரை நிறுத்தி ஆசிப்பை காரில் ஏற்றினார்.
  • பின்னர், இறச்சகுளம் பகுதிக்கு கார் வந்ததும் ஆசிப் இறங்கினார்.
  • அப்போது அங்கு காத்திருந்த ஆசிப்பின் நண்பர்கள் மாகின், சமீர், அவரது சகோதரர் நசீர் ஆகிய 3 பேரும் சேர்ந்து சந்தோஷ் கோஷியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டே கால் சவரன் நகையை கத்தியை காட்டி மிரட்டி பறித்தனர்.
  • மேலும், சந்தோஷ் கோஷியின் செல்போனில் இருந்து கூகுள்-பே மூலம் 73 ஆயிரம் ரூபாயையும் அபேஷ் செய்தனர்.
  • இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சமீர் மற்றும் அவரது சகோதரர் நசீர் ஆகிய இருவரை கைது செய்தனர்.
  • மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்