களமாட காத்திருக்கும் நடால்.. 14வது முறையாக சாம்பியன் பட்டம் அடிப்பாரா?

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 14வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் கனவுடன் களிமண் கள நாயகன் ரஃபேல் நடால் இன்று களமிறங்க உள்ளார்.

Update: 2022-06-05 09:29 GMT

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 14வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் கனவுடன் களிமண் கள நாயகன் ரஃபேல் நடால் இன்று களமிறங்க உள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெறுகிறது.

இறுதிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர வீரர் நடாலும், நார்வேவின் இளம் வீரர் காஸ்பர் ரூடும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இதுவரை 13 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை தன்வசப்படுத்தியிருக்கும் நடால், 14வது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இன்று களமிறங்க உள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் நடால் தோல்வியே கண்டிராத நிலையில், காஸ்பர் ரூடை அவர் எளிதில் வீழ்த்திவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இன்று நடால் சாம்பியன் பட்டம் வென்றால், அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்