முன்னாள் அதிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்...வெளியான ஆயிரக்கணக்கான ஆவணங்கள் - உடையுமா மர்மம்?
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி தொடர்பான ஆவணங்களை அமெரிக்க தேசிய ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.
1963ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் காரில் சென்று கொண்டே மக்களைப் பார்வையிட்ட போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அப்போதைய அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது இறப்பு குறித்த மர்மம் இன்னும் தீர்ந்த பாடில்லை... கடந்த 2017ம் ஆண்டில் அப்போதைய அதிபர் ட்ரம்ப், கென்னடி குறித்த சில ஆவணங்களை வெளியிட்டார்.
இந்நிலையில், தற்போதைய அதிபர் பைடனின் ஒப்புதலுக்குப் பிறகு கென்னடி தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க தேசிய ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.