தாய்,மகன் கொடூரமாக அடித்துக் கொலை.. புதுக்கோட்டையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2022-12-25 03:21 GMT

புதுக்கோட்டை அருகே தாய், மகன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். பொறியாளரான இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். இதனிடையே இவர் தன் 75 வயதான தாய் சிகப்பிக்கு இரவு உணவு கொடுக்க சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சூழலில் சிகப்பியின் வீடு திறக்கப்படாமல் இருப்பது கண்டு அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் அவர்கள் வந்து பார்த்த போது தாயும், மகனும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கே இருந்த சிசிடிவி கேமரா இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அதற்கான ஆதாரங்களை கொலையாளிகள் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்த நிலையில் நகை, பணத்திற்காக நடந்த கொலையா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்