ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் - காரைக்காலில் பரபரப்பு
காரைக்கால் - பேரளம் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் வழியாக திருவாரூர் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் காரைக்கால்- கும்பகோணம் பிரதான சாலையில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்ய முயன்ற போலீசாரிடம் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.