அமெரிக்காவை கலக்கும் "மோடி ஜி தாலி" - வரிசைகட்டி நிற்கும் அமெரிக்கர்கள்
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக அங்கு நியூ ஜெர்சியில் "மோடி ஜி தாலி" என்ற பெயரில் இந்திய உணவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளார். இந்நிலையில் நியூஜெர்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஸ்ரீபாத் குல்கர்னி, கிச்சடி, ரசகுல்லா, இட்லி, dhokla, உள்ளிட்ட பல வகை உணவுகள் அடங்கிய தொகுப்பை "மோடி ஜி தாலி" என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார்.