ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு இயற்றி, கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, அக்டோபர் 19-ந் தேதியன்று, அந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவதற்கான மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று காலை 11 மணிக்கு சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது, சட்டத்துறை செயலர் கோபி குமார், உள்துறைச் செயலர் பணீந்திர ரெட்டி ஆகியோர் உடனிருப்பார்கள்.
அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தரும் விளக்கத்தின் அடிப்படையில் மசோதா மீது ஆளுநர் முடிவெடுப்பார் என்று தெரிகிறது.