எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் இடத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. படகோட்டி செய்த அற்புத செயல்

Update: 2022-08-21 08:41 GMT

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தொடர் விடுமுறை எதிரொலியால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்து வருகின்றனர்,மேலும் பள்ளி மாணவ மாணவிகள் விடுமுறை என்பதால் அவர்களும் சுற்றுலா மையத்திற்கு படையெடுத்து வருகின்றனர், மேலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகில் அலையாத்தி காடுகள் நடுவே சென்று இயற்கையின் அழகை ரசித்து செல்கின்றனர், குறிப்பாக முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் நடித்த இதயக்கனி திரைப்படம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் எடுத்ததை நினைவூட்டும் வகையில் படகில் செல்லும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் படகோட்டி ஒருவர் எம்ஜிஆர் பாடல்களை பாடி சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து அசத்தி வருகிறார் இது சுற்றுலா பயணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது, இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்தால் படகில் சென்று அலையாத்தி காடுகளை பார்த்துவிட்டு சென்றிடுவோம் ஆனால் நாங்கள் சென்ற படகுகளில் எம்ஜிஆர் பாடல்களை பாடி எங்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் வகையில் எங்களை மகிழ்ச்சி அடையச் செய்து பாடல்களை பாடி வருவது எங்களை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறது, இந்தப் பாடல்களை கேட்கும் பொழுது எனது தந்தையை நினைவூட்டுவதாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்