மேட்டுப்பாளையம் ரோட்டில் மணக்கும் வாசம்... அதிசய செங்காம்பு கருவேப்பிலை..! என்னது இதில் இவ்வளவு அதிசயம் இருக்கா...!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் மட்டுமே விளையக் கூடிய மருத்துவ குணமும், தனிச் சுவையும் கொண்ட செங்காம்பு கருவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன...
10 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கருவேப்பிலை பயிரிட்டு வருகின்றனர். கருவேப்பிலைக்கே நல்ல மணமுண்டு... அதிலும் இந்த செங்காம்பு கருவேப்பிலை பயிரிடப்பட்ட கிராமப் பகுதிகளுக்கு சென்றால் காற்றோடு கலந்து வரும் அதன் மணம் மனதிற்கு இதமளிக்கிறது... செங்காம்பு கறிவேப்பிலை விளைச்சலுக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சீதோஷ்ண நிலை மற்றும் மண் வளம் காரணமாக உள்ளது. மேட்டுப்பாளையம் காரமடை வட்டார பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் செங்காம்பு கருவேப்பிலை பயிரிட முடியாது என்பதை விவசாயிகள் உறுதிபட கூறுகின்றனர். இதில் அதிகளவு ஊட்டச்சத்தும், மருத்துவ குணமும் நிறைந்துள்ளது... அத்துடன் இதில் இருந்து எண்ணெயும் எடுக்கப்படுகிறது... இத்தகைய தனி சிறப்புகளைக் கொண்ட செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை, மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது...