"3 முறை ஜாமினில் வந்து 4 நாளில் கேன்சரை விரட்டுவதாக சொல்லும் டாக்டர்" - கொதிக்கும் மக்கள்
- பல்வேறு வழக்குகளில் 3 முறை முன் ஜாமின் பெற்றும், மேட்டுப்பாளையத்தில் பகிரங்கமாக சிகிச்சை அளித்து வரும் போலி சித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புற்றுநோய் உட்பட 14 வகை நோய்களை மூலிகை வைத்தியத்தால் குணப்படுத்த முடியும் எனக்கூறி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சை அளித்து வருகிறார்.
- தன்னைத் தானே மூலிகை வைத்தியர் என்று கூறிக்கொள்ளும் ரவிச்சந்திரன், 4 நாட்களில் கேன்சரை குணப்படுத்த முடியும் என பொய்யான தகவலை அளித்து வருவதாகவும், அவரால் சிகிச்சை பெற்று பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- எனவே, உரிய அனுமதியின்றி சிகிச்சை அளித்து வரும் ரவிச்சந்திரன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.