தமிழகத்தில் இந்த தேதியில் மருத்துவ கலந்தாய்வு -அமைச்சர் மா.சுப்ரமணியன்..

Update: 2023-07-16 07:50 GMT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீட்டிற்கான பட்டியலை, அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னையில் இன்று வெளியிட்டார். அரசுப் பள்ளியில் பயின்றவர்களில் சேலம் கிருத்திகா 569 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். தருமபுரியை சேர்ந்த பச்சையப்பன் 565 மதிப்பெண்களும், காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் 560 மதிப்பெண்களும் பெற்றனர். அரசு ஒதுக்கீடு தரவரிசையில் விழுப்புரத்தை சேர்ந்த பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் மொத்தம் உள்ள 71 மருத்துவக் கல்லூரிகளில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், 473 எம்.பி.பி.எஸ் இடங்கள் உட்பட மொத்தம் 6 ஆயிரத்து 326 இடங்கள் உள்ளதாக குறிப்பிட்டார். மத்திய அரசு வரும் 20ம் தேதி கலந்தாய்வு நடத்த உள்ளதாக ஆதாரப்பூர்வமற்ற செய்தி வந்துள்ளதாகவும், ஒருவேளை 20ம் தேதி திட்டமிட்டபடி நடத்தினால், தமிழகத்தில் 25ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்