மெக்டொனால்ட் உணவகத்திற்கு 1கோடி அபராதம்..10 வயது குழந்தைகளை வேலைக்கு அமர்த்தி கொடூரம்

Update: 2023-05-04 08:56 GMT

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்டின் விற்பனை உரிமம் பெற்ற உணவகங்கள் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்திய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது...

கென்டக்கி மாகாணத்தில் மெக்டொனால்டு உணவகங்களில் சட்டவிரோதமாக பணிபுரிந்த 300 குழந்தைகளில் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகளும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கென்டக்கியின் மிகப்பெரிய நகரமான லூயிஸ்வில்லில் உள்ள ஒரு மெக்டொனால்ட் உணவகத்தில் வேலை செய்த 10 வயது குழந்தைகளுக்கு மிகக் குறைவான ஊதியமோ அல்லது ஊதியமே வழங்கப்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அந்த உணவகத்திற்கு 1 கோடியே 73 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்