5 ஆண்டுகளாக கோப்பை வெல்லாததால் விற்பனைக்கு வரும் மான்செஸ்டர் யுனைடெட் அணி...
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் விற்கப்படவுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது. மான்செஸ்டர் யுனைடெட் அணி 5 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாமல் இருப்பதால், ரசிகர்களின் கடும் விமர்சனங்களுக்கு கிளப்பின் உரிமையாளர்கள் இலக்காகி வந்தனர். இதனால், 17 ஆண்டுகளாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பை உரிமை கொண்டாடும் கிளேசர் குடும்பம், கிளப்பை விற்பது குறித்து நிதி ஆலோசகர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஓல்ட் டிராஃபோர்ட் கிளப்பின் ஒரு பகுதி விற்கப்படலாம் அல்லது ஸ்டேடியம், உள்கட்டமைப்பு மறுமேம்பாடு உள்ளிட்ட முதலீடுகள் விற்கப்படலாம் என கிளப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.