"ஆண் போலீஸ் என்னிடம் அத்துமீறினார்" - ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை பகீர் தகவல்

Update: 2023-04-26 03:45 GMT

தெலங்கானாவில் போலீசாரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட ஷர்மிளா நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்.எஸ்.ஆர் கட்சி தலைவருமான ஷர்மிளா, தெலங்கானாவில் போராட்டம் நடத்தியபோது, போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஷர்மிளாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஷர்மிளாவை நிபந்தனை ஜாமினில் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா ஆண் போலீசார் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்