"இந்தியாவை இணைக்கும் பிரம்மாண்ட படைப்பு" - கூட்டணி சேரும் 'புஷ்பா', 'காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர்கள்
இந்தியாவின் பிரபல இயக்குநர்களான சுகுமார், விவேக் அக்னிஹோத்ரி இணைந்து பிரம்மாண்ட படைப்பை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா படம் மூலம் இயக்குநர் சுகுமாரும், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் மூலம் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியும் இந்திய திரையுலகில் பிரபலமடைந்தனர். சுகுமார் மற்றும் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக்குடன் இணைந்து இந்திய சினிமாவை இணைக்கும் படைப்பை உருவாக்க உள்ளதாக விவேக் அக்னிஹோத்ரி குறிப்பிட்டுள்ளார்.