அரிவாள் மீது ஏறி சாமியார் நடனம்.. வாயில் அலகு குத்தியும் தீக்குழியில் இறங்கியும் நேர்த்திகடன்

Update: 2023-04-24 05:49 GMT

மதுரை சித்திரைத் திருவிழாவின் முதல் நாளில், சுவாமியும் அம்மனும் வீதி உலா வந்து அருள் பாலித்தனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை தங்க கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கற்பக விருட்சம் வாகனத்தில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரரும், சிம்மம் வாகனத்தில் மீனாட்சியும் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்தனர். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை அருகே அரையபுரம் கிராமத்தில், சீதளாம்பிகை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், அலகு காவடி எடுத்தும், 16 அடி நீளம் கொண்ட அலகை வாயில் குத்தியும், கோயில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குழியில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து, கண்கவர் வகையில் வான வேடிக்கையுடன் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி, கேரள பாரம்பரிய ரதங்களின் ஊர்வலம் நடைபெற்றது. கோத்தகிரி மலையாளிகள் சங்கம் சார்பில், கேரள பஞ்ச வாத்தியம், சிங்காரி மேளம், செண்டை மேளம், காவடி நடனத்துடன் அலங்கார ரதங்கள் ஊர்வலம் புறப்பட்டது. காமராஜர் சதுக்கம், மார்கெட் திடல், பேருந்து நிலையம் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக கடைவீதி மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட கேரள ரதத்தில் அம்மன் எழுந்தருளி, பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.

கும்பகோணத்தில் உள்ள அரியலூர் மாரியம்மன் கோயிலில், கோடை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் மகாமக குளத்தில் இருந்து பல்வேறு வகையான மலர்களை தட்டுகளில் வைத்து, ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். அந்த மலர்களை மூலவர் அம்மனுக்கு கொடுத்து, சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து, 10 நாட்களுக்கு பால்குட வீதி உலா, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில், சுயம்பு காவல் கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை ஒட்டி, 16 அடி நீளம் கொண்ட அரிவாள் மீது ஏறி சாமியார் ஒருவர் நடனமாடினார். கருப்பண்ணசாமி கோயிலில் இருந்து காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுப்பதற்காகும்பகோணத்தில் உள்ள அரியலூர் மாரியம்மன் கோயிலில், கோடை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் மகாமக குளத்தில் இருந்து பல்வேறு வகையான மலர்களை தட்டுகளில் வைத்து, ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். அந்த மலர்களை மூலவர் அம்மனுக்கு கொடுத்து, சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து, 10 நாட்களுக்கு பால்குட வீதி உலா, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

க மேள தாளம் முழங்க ஊர்வலமாக 16 அடி அரிவாள் கொண்டுச் செல்லப்பட்டது. பின்னர், பொது மக்கள் மத்தியில் பூஜைகள் செய்து, சாமி அருள் வந்தவுடன் அரிவாள் மீது ஏறி சாமியார் நடனமாடினார். இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்