தரமற்ற முறையில் புதிய தார் சாலை... அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர் - மிரண்டு போய் நின்ற அதிகாரிகள்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி முதல் குலசேகரன்கோட்டை வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நபார்டு வங்கி உதவியுடன் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலை தரமற்ற முறையில் இருப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்த மதுரை ஆட்சியர் சங்கீதா , வாகனம் வந்தாலோ சாலை பெயர்ந்து விடும் போல் உள்ளதாக கூறி அதிகாரிகளை எச்சரித்து சென்றார். இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் பெயர்ந்து வரும் சாலையின் இரு புறமும் மண்ணை பரப்பி பணிகள் முடிந்து விட்டதாக கூறி சென்றதால் அப்பகுதிமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.