சித்தர் வடிவில் வந்த சிவபெருமான்..பூர்வ ஜென்மம் புண்ணியம் கிடைக்க வேண்டுமா? முக்தி அளிக்கும் புஷ்பவனேஸ்வரர்

Update: 2023-05-13 04:41 GMT

காசி, ராமேஸ்வரத்திற்கு சென்றால் போதும் பிறவி பாவம் தீரும் என்பார்கள்...

ஆனால் அங்கு போக முடியாதவர்கள் சிவகங்கை புஷ்பவனேஸ்வரரை வணங்கினால் போது பூர்வ ஜென்மம் புண்ணியம் கிடைக்குமாம்...

தனது தந்தையின் அஸ்தியை கரைக்க காசியிலில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தனது நண்பருடன் வந்த தமயக்ஞன் ஓய்வு எடுப்பதற்காக இத்தலம் அமைந்துள்ள இடத்தில் தங்கியுள்ளான்...

அப்போது அவருடைய நண்பர் அஸ்தி இருந்த குவளையை திறந்து பார்த்த போது அதில் பூக்கள் மட்டுமே இருந்துள்ளது.. ஆனால் இதை அவன் தமயக்ஞனிடம் கூறவில்லை...

ராமேஸ்வரத்தில் குவளையை திறந்த போது அங்கு அஸ்திதான் இருந்துள்ளது.. அப்போது தான் நண்பர் தமயக்ஞனிடம் கூறியுள்ளான்..

அவர்கள் திருபுவனத்திற்கு வந்து பார்த்த போது குவளையில் பூக்கள் இருந்ததை கண்டு ஆச்சர்யத்துடன் மெய்சிலிர்ந்து காசி ராமேஸ்வரத்தை விட புண்ணிய தலம் இது என்பதை உணர்ந்திருக்கிறார்கள்....

அன்றிலிருந்து இறைவன் புஷ்பவனேஸ்வரர் என்றழைக்கப்பட்டதாக கூறுகிறது வரலாறு...

அதேபோல திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்க நினைத்த போது ஆற்றை கடக்கும் பகுதி மண் அனைத்தும் லிங்கமாக தோன்றவே எப்படி மிதித்து செல்வது என்று வருந்தியிருக்கிறார்...

கருணை கொண்ட ஈசன் ஆற்றின் மறுகரையில் இருந்து காட்சி கொடுக்க முன்னிருந்த நந்தி மறைக்காமால் சற்று வளைந்திருக்கிறது... இக்காட்சியை இன்றும் நாம் இத்தலத்தில் கானலாம்...

திருபுவனத்தில் பொன்னனையாள் என்ற நடன மாது பூவநாதருக்கு பொன்னால் விக்கிரகம் செய்ய விரும்பினாளாம்...

தன்னிடம் அவ்வளவு வரவு இல்லாததால் வருந்தவே சித்தர் உருவம் கொண்ட ஈசன் அவளிடம் இருந்த பித்தளை, இரும்பு உள்ளிட்ட பொருட்களை தீயில் இட சொல்லியிருக்கிறார்...

அவளும் அதன்படி செய்ய அனைத்தும் பொன்னாக மாறவே பூவநாதரை பொன்னால் வடித்திருக்கிறாள் பொன்னனையாள்...

அவரின் அழகில் மயங்கியவள் கன்னத்தை ஆசையாக கிள்ளி கொஞ்சியிருக்கிறார்..

பொன்னனையாள் கன்னத்தில் கிள்ளிய அடையாளத்தை இன்றும் நம்மால் பார்க்க முடிகிறது...

இத்தலத்தில் இறைவன் புஷ்பவனேஸ்வரர் என்றும், பூவநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்....

தாயார் சவுந்தரநாயகியும், மின்னனையாளும் அருள் பாலிக்கின்றனர்...

உஷாதேவி, சிவசூரியன், பாலகணபதி, மற்றும் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட வேடுவலிங்கம் ஆகிய தெய்வங்கள் வரிசையாக காட்சிதருகின்றனர்.

இத்தல இறைவனை வணங்குபவர்களுக்கு மறு ஜென்மம் இல்லா முக்தி கிடைக்கும்...

திருமண வரம் பெற, குழந்தை பாக்கியம் பெறவும் வஸ்திரம் சாற்றி வில்வ இலை மாலை அணிவித்து வழிபாடு செய்கின்றனர்...

கோயிலானது காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்...

மானாமதுரையில் இருந்து 29 கிலோ மீட்டரும், மதுரையில் இருந்து 20 கிலோ மீட்டரும் பயணித்தால் கோயிலை வந்தடையலாம்...

நீங்கா வரம் அருளும் புஷ்பவனேஸ்வரரை நாமும் வணங்குவோம் அவரின் அருளால் வளம் பெறுவோம்...

Tags:    

மேலும் செய்திகள்