3 நிமிடத்தில் கசந்த 3 ஆண்டு காதல்.. 6 நொடியில் முடிந்த 6 மாத உறவு - கட்டிலுக்கு அடியில் ஊர்சுற்றி காதலனின் ரகசியம்
- டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கின் பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லியை சேர்ந்த நிக்கியும் தன் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
- அடுத்தடுத்து இந்த சம்பவங்கள் டெல்லியில் அரங்கேறிய நிலையில் மும்பையில் நடந்திருக்கிறது மற்றொரு லிவ் இன் கொலை...
- மும்பையில் பல்கார் பகுதியை சேர்ந்தவர் 37 வயதான மேகா. செவிலியரான இவர் துலிஞ்ச் பகுதியில் தனது காதலன் ஹர்திக்ஷாவுடன் ஒரே வீட்டில் லிவ் இன் உறவில் வசித்து வந்துள்ளார்.
- இதில், மூன்று வருடத்திற்கு மேலாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடைசி ஆறு மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் உறவில் இருந்துள்ளனர்.
- இந்நிலையில், காதலன் ஹர்திக்ஷா எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததகாவும், செவிலியராக வேலை பார்த்த மேகாவே வீட்டு செலவு உட்பட அனைத்தையும் கவனித்து, காதலனுக்கும் சேர்த்து செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- இந்நிலையில், காதலி மேகா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹர்திக்சாவை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
- இதற்கு முறையாக பதிலளிக்காமல் ஹர்திக்ஷா அலட்சியம் காட்டி வந்ததால், இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த ஹர்திக்ஷா, காதலியை கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்.
- இதன்பின்னர் காதலியின் உடலை என்ன செய்வது என செய்வதறியாமல் தவித்த ஹர்திக்ஷா கடைசியில் வீட்டில் படுக்கைக்கு அடியில் காதலியின் சடலத்தை மறைத்து விட்டு தப்பியோடி இருக்கிறார்.
- பின்னர் நடந்த சம்பவங்களை எல்லாம் ஹர்திக்ஷா, தன் உறவினர் ஒருவருக்கு போன் செய்து கூறியுள்ளார்.
- காதலியை கொன்றுவிட்டதை கூறிய ஹர்திக்ஷா தனக்கு பயமாக உள்ளதாகவும், தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறியதாக தெரிகிறது.
- இந்த சூழலில் வீட்டில் மறைத்து வைத்திருந்த சடலத்தினால் துர்நாற்றம் ஏற்பட, இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.
- உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை உடைத்து உள்ளே சென்ற போது, படுக்கையின் அடியில் பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி விசாரணையை கையிலெடுத்த போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தனர்.
- அப்போது இருவருக்குமிடையே அடிக்கடி பணத் தகராறு காரணமாக அடிக்கடி சண்டையிட்டு கொள்வதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
- விசாரணையில், காதலி ஒருவாரத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்த நிலையில், மும்பையில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து வலைவீசி தேடி வந்தனர்.
- இந்நிலையில், மத்தியபிரேதசம் நாக்டா பகுதியில் ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே போலீசாரால் ஹரிதிக்ஷா கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லிவ் இன் உறவில் இருந்த காதலியை காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது...