மக்களுக்கு பணி, மகன்களுக்கு பாடம்... பணிக்கு நடுவே பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்கும் அமைச்சர்...
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும், அலுவல் கோப்பில் கையெழுத்திட்டபடியே தனது மகன்களுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா பாடம் கற்றுத்தரும் வீடியோ காட்சிகள், சமுக வலைதளங்களில் வெளியாகின. அரசுப் பணிகளுக்கு மத்தியில், தனது மகன்களை விட்டுக் கொடுக்காமல், தாய்மை பணியில் ஈடுபட்ட சந்திர பிரியங்காவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.