சட்ட அமைச்சர்கள் மாநாடு... காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
குஜராத்தில் நடைபெற உள்ள அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்ற உள்ளார்.
குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்றும் நாளையும் மாநாடு நடைபெற உள்ளது. இதில், மாநில சட்ட அமைச்சர்கள், சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். மாநிலங்கள் தங்களது நடைமுறைகள், புதிய யோசனைகளை தெரிவித்து, பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த மாநாடு வழிவகுக்கும். மேலும், விரைவாக நீதி வழங்குவதற்கான மத்தியஸ்தம், சட்ட உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்தல், போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.