கோலாலம்பூர் வேளாண் பண்ணையில் நிலச்சரிவு... மண்ணுக்குள் புதைந்தவர்களை தேடும் பணி தீவிரம்
கோலாலம்பூர் புறநகர் பகுதியான பதங்கலி நகரில் உள்ள வேளாண் பண்ணை இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 79 பேர் அங்கு கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர்.
திடீரென 100 அடி உயரத்தில் இருந்து மண்சரிவு ஏற்பட்டு, அங்கு தங்கி இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், 23 பேரை உயிருடன் மீட்டனர்.
காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எஞ்சிய 53 பேரில் 13 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மண்ணில் புதைந்துள்ள 40 பேரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவை தொடர்ந்து பதங்கலி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.