திடீர் திருப்பத்தில் கொடநாடு வழக்கு ...தற்கொலை செய்து கொண்ட ஆப்ரேட்டர் -அதிரடி விசாரணையில் சிபிசிஐடி

Update: 2022-12-19 17:18 GMT

கொடநாட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் அவரது இல்லத்தில் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பங்களாவில், கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கை, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி, தற்கொலை செய்து கொண்ட தினேஷின் வீட்டில், சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது குடும்பத்தினரிடம், கொடநாட்டில் தினேஷ் பணியாற்றிய ஆண்டு மற்றும் அவர் பயன்படுத்திய செல்போன் குறித்த தகவல்களை கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு, கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த வழக்கு என 3 வழக்குககளையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்