22 உயிர்களை பலி வாங்கிய கேரளா விபத்துநாட்டை உலுக்கிய சம்பவத்தில் முக்கிய நபர் கைது
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனூரில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். 5 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்து தொடர்பாக, படகின் உரிமையாளர் தனூரைச் சேர்ந்த நாசர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்த நிலையில், நாசர் தலைமறைவானார். கொச்சியில் நடந்த வாகன சோதனையில் அவருடைய கார் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் வந்த நாசரின் சகோதரர் சலாம், உடன் வந்த முகமது ஷாபி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கோழிக்கோட்டில் தலைமறைவாக இருந்த நாசரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய சுற்றுலாப் படகு, அனைத்து விதிகளையும் மீறி இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.