ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. விபரீத முடிவுக்கு காரணம் என்ன? - அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
- கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
- திருச்சூர் காரளம் ஹரிபுரத்தைச் சேர்ந்தவர் மோகனன்..
- இவரின் மனைவி மினி. இவர்களின் மகன் ஆதர்ஷ் பிளஸ் ஓன் படித்து வந்தார்.
- இவர்களுடைய மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மோகனன் பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தன்று நீண்ட நேரமாக இவர்களின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை.
- இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளிக்கவே, அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
- அப்போது வீட்டில் 3 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
- இவர்களின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.