உடுமலைப்பேட்டையில் பிரிண்டர் வைத்து அச்சிடப்பட்ட கள்ள நோட்டு... கேரளா வரை பரவியுள்ள நெட்வொர்க்... அதிர வைக்கும் தகவல்கள்
கேரளா மாநிலம், மறையூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வங்கி பணம் சேமிப்பு இயந்திரத்தில் சுமார் 80 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இடப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த கனிராஜ் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார், அழகன், பழனி குமார் ஆகயோரிடமிருந்து கள்ள நோட்டு கிடைக்கப்பெற்றதாக தெரிவவந்தது.
சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், உடுமலைபேட்டை பகுதியில் பிரபு என்பவர் வீட்டில் பிரிண்டர் வைத்து கள்ள நோட்டு அச்சடிப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், பிரபு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹக்கீம் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.