"கணவரை என்னோடு சேர்த்து வைங்க.." - எஸ்.பி ஆபிசிக்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

Update: 2023-04-27 03:38 GMT

ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த பெண் ஒருவர், தனது கணவரை சேர்த்து வைக்க கோரி, தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த போலீசார், பெட்ரோல் பாட்டிலை கைப்பற்றி, அந்த பெண்ணை எஸ்.பி., தங்கதுரையிடம் அழைத்துச் சென்றனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அபிராமத்தைச் சேர்ந்த கவிதா என்பதும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்ததும் தெரியவந்தது. நான்கு வயதில் குழந்தை உள்ள நிலையில், கணவர் தன்னை விட்டு பிரிந்து அவரது தாயாருடன் வசித்து வருவதாகவும், அவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எஸ்.பி.,யிடம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்