முதல் மனைவியின் கிட்னியை திருடி 2வது கல்யாணம் செய்த கேடி கணவன்... 4 வருடம் கழித்து கொந்தளித்த மனைவி

Update: 2022-09-17 08:45 GMT

30 வயதாகும் ரஞ்சிதாவின் கணவர் பிரசாந்த் கந்து. இருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சிதாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே மருத்துவமனைக்கு சென்று சோதித்து பார்த்திருக்கிறார். அந்த சோதனை முடிவில் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்... ரஞ்சிதாவின் ஒரு கிட்னி காணாமல் போயிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

திகிலில் உறைந்து கிடந்த ரஞ்சிதாவுக்கு, அப்போது தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அறுவை சிகிச்சை நினைவுக்கு வந்திருக்கிறது. கணவரின் கட்டாயத்தின் பேரில் நடந்த அந்த ஆப்ரேஷனில் கிட்னி திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த ரஞ்சிதா பிரஷாந்திடம் விசாரித்திருக்கிறார்.

அப்போது தான் காதல் கணவனின் உண்மை முகம் அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

ஆம், நடந்த கொள்ளைக்கான சூத்திரதாரியே ரஞ்சிதாவின் ஆசை கணவன் பிரஷாந்த் தான்.

மனைவிக்கே தெரியாமல் அவரது கிட்னியை திருடி விற்றிருக்கிறார். இவை அனைத்தையையும் செய்தது உல்லாச வாழ்க்கைக்காக.

34 வயதாகும் பிரஷாந்த் வங்கதேசத்தில் இருந்து அகதியாக ஒடிசாவுக்கு வந்தவர். மது, மாது என போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர். வேலை வெட்டிக்கு செல்லாமல் சிற்றின்பத்திலேயே நாட்களை கழித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

அந்த சமயத்தில் தான் கிட்னியை விற்றால் பணம் கிடைக்கும் என்ற ரகசிய தகவல் பிரசாந்தின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. அதே நேரத்தில் ரஞ்சிதாவுக்கும் அடிக்கடி வயிற்று வலி ஏற்படவே, உடனே அதை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொள்ள நினைத்திருக்கிறார் பிரஷாந்த். மனைவியை பாசமாக பார்த்துக்கொள்வது போல் பாவ்லா செய்து கிட்னியில் கல் இருப்பதாகவும் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் பொய்களை அள்ளி வீசியுள்ளார்.

ரகசிய ஒப்பந்தப்படி மருத்துவர்களும் அதற்கு ஒத்து ஊதவே, கணவனின் பாச வலையில் விழுந்திருக்கிறார் ரஞ்சிதா. திட்டப்படி ரஞ்சிதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. கல்லை எடுப்பதாக கூறி ஒரு கிட்னியை எடுத்திருக்கிறது அந்த கொள்ளை கூட்டம்.

சிகிச்சைக்கு பிறகு கிட்னியை விற்று நிறைய பணம் பார்த்திருக்கிறார் பிரஷாந்த். அந்த பணத்தை வைத்து பெங்களூரில் வேறு ஒரு பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

கணவனின் இந்த சதி செயலால் கொதித்து போன ரஞ்சிதா, பிரசாந்தை கைது செய்ய கோரி ஆதாரங்களோடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெங்களூரில் உல்லாசமாக வாழ்ந்து வந்த பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்